தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தல்

திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தல்

திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தல்


UPDATED : ஆக 19, 2014 12:00 AM

ADDED : ஆக 19, 2014 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2014 12:00 AM ADDED : ஆக 19, 2014 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தேசிய திறன் தகுதி திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பிற்கு மேல், 8ம் வகுப்பிற்கு கீழ் என, 200 பேருக்கு திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும்படி, அனைத்து மாநிலங்களின் தொழில்நுட்ப செயலர்கள் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர்களுக்கு, அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகம் (ஏ.ஐ.சி.டி.இ.,) அறிவுறுத்தியுள்ளது.

தொழில் நுட்பக் கல்வி மற்றும் அவை சார்ந்த தொழில்கள் மற்றும் சமூகத்தினரிடையே தொடர்பு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை, ஏ.ஐ.சி.டி.இ., செயல்படுத்தி வருகிறது.

ஏ.ஐ.சி.டி.இ.,யின், 39வது கூட்டம், கடந்த ஜூனில், நடந்தது. இதில் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, ஆண்டுக்கு 200 மாணவர்களுக்கு, தேசிய திறன் தகுதி திட்டத்தின் கீழ், திறன் பயிற்சி வழங்குவதை கட்டாயமாக்க முடிவெடுக்கப்பட்டது.

இதற்கான கட்டணம், அந்தந்த மாநிலங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us