தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க சிவகங்கை பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க சிவகங்கை பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க சிவகங்கை பள்ளி மாணவர்கள் தேர்வு


UPDATED : ஆக 19, 2014 12:00 AM

ADDED : ஆக 19, 2014 11:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2014 12:00 AM ADDED : ஆக 19, 2014 11:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சென்னையில் நடக்கும் மாநில அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க சிவகங்கை பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கருத்தரங்கம் சிவகங்கையில் நடந்தது. வேளாண்மைத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்னை, சவால் எனும் தலைப்பில் பள்ளி மாணவர்கள் பேசினர்.

இதில், சிவகங்கை ஆக்ஸ்போர்டு மெட்ரிக்., பள்ளி 9ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் ராஜலிங்கம், முப்பையூர் அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி கீர்த்தனா ஆகியோர் மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன் பரிசு வழங்கி பாராட்டினார். நேர்முக உதவியாளர் சேக்கப்பன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us