தெரு நாய்களை கட்டுப்படுத்தி பள்ளி குழந்தைகளை காக்குமா பேரூராட்சி
தெரு நாய்களை கட்டுப்படுத்தி பள்ளி குழந்தைகளை காக்குமா பேரூராட்சி
UPDATED : ஆக 19, 2014 12:00 AM
ADDED : ஆக 19, 2014 12:08 PM
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பஜார், தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், பள்ளிக்கு செல்லவே குழந்தைகள் அச்சப்படும் சூழ்நிலை உள்ளது.
முதுகுளத்தூர் பஜார், தெருக்களில் நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வெளியூர்களிலிருந்து இரு சக்கர வாகனங்களில் வருவோர்களை, பஜார்களில் திரியும் நாய்கள் கடிக்க விரட்டுகின்றன.
அவர்கள் நாய்களுக்கு பயந்து விபத்தில் சிக்குகின்றனர். பஜார்களில் கூட்டம், கூட்டமாக திரியும் நாய்கள், சண்டையிட்டுகொள்வதாலும், சாலையில் செல்வோரை துரத்துவதாலும், பொருட்கள் வாங்க பஜாருக்கு வரவே பெண்கள், முதியவர்கள் பயப்படுகின்றனர். குழந்தைகளை கூட கடைகளுக்கு அனுப்ப, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.
நாய்களுக்கு பயந்து, பள்ளிகளுக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் குழந்தைகளை, பெற்றோர் நேரில் சென்று காத்திருந்து வீடுகளுக்கு அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளிக்கு குழந்தைகள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
