இந்திய உளவியல் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம்
இந்திய உளவியல் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம்
UPDATED : ஆக 20, 2014 12:00 AM
ADDED : ஆக 20, 2014 10:55 AM
புதுச்சேரி: இந்திய உளவியல் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் இன்று(ஆகஸ்ட் 20) துவங்குகிறது.
புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறை அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் சார்பில், இந்திய பள்ளி உளவியல் சங்கத்துடன் இணைந்து, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வில்லியனுாரில் உள்ள வட்டார வள மையத்தில் இன்று துவங்கும் நிகழ்ச்சியில் அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் கிருஷ்ணராஜ் தலைமை வகிக்கிறார். இந்த பயிலரங்கத்தை சென்னை தேசிய பன்முக மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் நீரதா சந்திரமோகன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இரண்டு நாள் பயிலரங்கில் மாணவர் பிரச்னைகள் கற்றல் குறைபாடு மாணவர்-ஆசிரியர் நல்லுறவு மாணவர்கள் கற்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் பள்ளிச்சூழல் குடும்பச் சூழல் போன்ற பல்வேறு பள்ளி உளவியல் அம்சங்கள் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிலரங்கில் 120 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
