தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டேபிள் டென்னிஸ் போட்டியில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மாணவர்கள் முதலிடம்

டேபிள் டென்னிஸ் போட்டியில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மாணவர்கள் முதலிடம்

டேபிள் டென்னிஸ் போட்டியில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மாணவர்கள் முதலிடம்


UPDATED : ஆக 20, 2014 12:00 AM

ADDED : ஆக 20, 2014 11:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2014 12:00 AM ADDED : ஆக 20, 2014 11:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான மண்டல டேபிள் டென்னிஸ் போட்டிகளில், மதுரை - அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

பல்கலை ஏ பிரிவு சாம்பியன் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, பி பிரிவு சாம்பியன் மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி, சி பிரிவு கொடைக்கானல் கிறிஸ்டியன் கல்லுாரி, திண்டுக்கல் ஜிடிஎன் கல்லுாரி மற்றும் டி பிரிவு சிவகாசி அஞ்சா கல்லுாரி அணிகளுக்கு லீக் முறையில் போட்டிகள் நடந்தன.

ஏ பிரிவு சாம்பியனான சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி அணி, 3 க்கு 1 என்ற புள்ளிகளில், பி பிரிவை வீழ்த்தியது. தொடர்ந்து 3க்கு 2 என்ற புள்ளிகளில், சி பிரிவை வீழ்த்தியது. 3க்கு 1 என்ற புள்ளிகளில், டி பிரிவை வீழ்த்தி முதலிடம் பெற்றது.

வெற்றிபெற்ற மாணவர்கள் பாலகிருஷ்ணன், சத்யநாராயணன், அனுபவ் கிருஷ்ணாவுக்கு பல்கலை உடற்கல்வி இயக்குனர் சந்திரசேகரன் சுழற்கோப்பையை வழங்கினார். கல்லுாரி முதல்வர் பத்மனாபன், உடற்கல்வி இயக்குனர் தங்கமுத்து, பயிற்சியாளர் சுந்தர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us