தமிழகத்தில் 3 புதிய விவசாயக் கல்லுாரிகள்: அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி
தமிழகத்தில் 3 புதிய விவசாயக் கல்லுாரிகள்: அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி
UPDATED : ஆக 20, 2014 12:00 AM
ADDED : ஆக 20, 2014 12:20 PM
மதுரை: தமிழகத்தில் மூன்று புதிய விவசாயக் கல்லுாரிகள் துவங்கப்படும் என, மதுரை விவசாயக் கல்லுாரி பொன்விழா ஆண்டு துவக்க விழாவில், அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
வேளாண் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ரபீந்திரன் வரவேற்றார். துணைவேந்தர் ராமசாமி பொன்விழா நிகழ்வுகளை விளக்கினார். கலெக்டர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "தஞ்சாவூர் திருவண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு விவசாயக் கல்லுாரிகள் துவங்கப்படும். ஒரு வாரத்தில் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்படும்" என்றார். பொன்விழா சின்னம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு, வேளாண் மகளிருக்கு, அம்மா விதைகளை வழங்கினார்.
அமைச்சர் செல்லுார் ராஜூ பேசுகையில், "வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 3,314 கிட்டங்கிகள் தானியங்களை சேமித்து வைப்பதற்காக கட்டப்பட்டுள்ளன" என்றார்.
