தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராமநாதபுரத்தில் தமிழ்த் தேசிய கருத்தரங்கு

ராமநாதபுரத்தில் தமிழ்த் தேசிய கருத்தரங்கு

ராமநாதபுரத்தில் தமிழ்த் தேசிய கருத்தரங்கு


UPDATED : ஆக 20, 2014 12:00 AM

ADDED : ஆக 20, 2014 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2014 12:00 AM ADDED : ஆக 20, 2014 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ்த் தேசிய கருத்தரங்கு நாளை துவங்கி ஆக. 22 வரை நடக்கிறது.

இதுகுறித்து கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் அமுதன் கூறியதாவது: பல்கலை மானியக்குழு, தமிழ் உயராய்வு மையம், தென்காசி தென்பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ் இலக்கியத்தில் முற்போக்கு கோட்பாடுகள் என்ற கருத்தரங்கு ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் நடக்கிறது.

மலேசியா தமிழ்ப் பல்கலை விரிவுரையாளரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தருமான கருணாகரன், டில்லி பல்கலை பேராசிரியர் அறவேந்தன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தமிழ்த் துறைத் தலைவர் ஸ்டீபன், மதுரை காமராஜ் பல்கலை தமிழ்த் துறையின் சத்தியமூர்த்தி, காந்திகிராம பல்கலை தமிழ்த்துறை தலைவர் சிதம்பரம், காரைக்குடி அழகப்பா பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் பாண்டி, சேதுபதி அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் நாகராஜன் மற்றும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர். இதில் சமர்ப்பிக்கப்படும் 21ஆய்வுக் கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்படும். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us