மருத்துவம் சார் பட்டப் படிப்பு - அரசு கல்லூரிகளில் 95 சதவீத இடங்கள் நிரம்பின
மருத்துவம் சார் பட்டப் படிப்பு - அரசு கல்லூரிகளில் 95 சதவீத இடங்கள் நிரம்பின
UPDATED : ஆக 20, 2014 12:00 AM
ADDED : ஆக 20, 2014 01:09 PM
சென்னை: மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான முதல் நாள் கலந்தாய்வில் அரசு கல்லூரிகளில் 95 சதவீத இடங்கள் நிரம்பின. பி.எஸ்சி. நர்சிங் பி.பார்ம் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.
தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் 197 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பி.எஸ்.சி. பி.பார்ம் உள்ளிட்ட எட்டு விதமான மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகள் உள்ளன. மொத்தம் 6,908 இடங்கள் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது. முதல் நாளில் 1,084 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். 637 பேர் பங்கேற்றனர். இதில் ஐந்து பேர் தவிர 632 பேர் இடங்களை தேர்வு செய்தனர். இவர்களில் பெரும்பாலோர் பி.எஸ்சி. நர்சிங் பி.பார்ம் படிப்புகளில் ஆர்வம் காட்டினர்.
ஒரே நாளில், அரசு கல்லூரிகளில் இருந்த 535 இடங்களில் 500 இடங்கள் நிரம்பின. முதற்கட்ட கலந்தாய்வு இம்மாதம் 27ம் தேதி வரை நடக்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தினமும் 1,000 பேர் வரை கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.
