இக்னோ வழங்கும் பாலியல் தொழிலாளர்களுக்கான சிறப்பு இளநிலைப் படிப்பு
இக்னோ வழங்கும் பாலியல் தொழிலாளர்களுக்கான சிறப்பு இளநிலைப் படிப்பு
UPDATED : ஆக 20, 2014 12:00 AM
ADDED : ஆக 20, 2014 04:16 PM
மும்பை: நாக்பூரிலுள்ள தனது பிராந்திய மையத்தில், பாலியல் தொழிலாளர்களுக்கான ஒரு சிறப்பு இளநிலைப் பட்டப்படிப்பை வழங்க, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுபோன்ற படிப்புகள், இக்னோவின் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களின் பிராந்திய மையத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாக்பூர் வளாகப் படிப்பு தொடர்பாக, இக்னோ பல்கலையின் அலுவலர்கள், இந்திய செஞ்சிலுவை சங்கத்தினரிடம் கலந்துரையாடலில் உள்ளனர். செஞ்சிலுவை சங்கமும், தனது வளாகத்தில் இப்படிப்பை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், இந்த படிப்பு வாய்ப்பு குறித்து பாலியல் தொழிலாளர்கள் பரவலாக அறிந்துகொள்ளும் வகையில், பல NGO -க்களின் உதவியை இக்னோ நாடியுள்ளது.
"இந்தக் கல்வியை அவர்கள் பெறுவதின் மூலமாக, அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புகட்ட முடியும். மேலும், அந்த அவலத் தொழிலில் இருந்து வெளியேறிய பின்னர், வாழ்க்கையை கண்ணியமாகவும், மேம்பட்ட நிலையிலும் நடத்துவதற்கு, இந்த தொழில் துணைபுரியும்" என்று இக்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.
