தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காரைக்குடி சிக்ரியில் தேசிய அறிவியல் மாநாடு

காரைக்குடி சிக்ரியில் தேசிய அறிவியல் மாநாடு

காரைக்குடி சிக்ரியில் தேசிய அறிவியல் மாநாடு


UPDATED : ஆக 21, 2014 12:00 AM

ADDED : ஆக 21, 2014 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2014 12:00 AM ADDED : ஆக 21, 2014 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: கடல்காற்று அரிமானம், கான்கிரீட் கட்டுமான அரிமானம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்படும் அரிமானம், அரிமான துறையில் தற்போதைய நவீனம் குறித்த தேசிய அறிவியல் மாநாடு, காரைக்குடி சிக்ரியில் நடக்கிறது.

இதில், இந்தியா முழுவதும் இருந்து 400 விஞ்ஞானிகள், இளம் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் அரிமான தடுப்புமுறை குறித்த ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். அதுமட்டுமன்றி, அரிமானத்தை தடுக்கும் கருவிகளை, உற்பத்தி செய்யும் 15 நிறுவனங்களின் கண்காட்சி இடம் பெறுகிறது.

திருச்சி என்.ஐ.டி., இயக்குனர் சுந்தர்ராஜன் துவக்கி வைக்கிறார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் செயல் இயக்குனர் சேதுரத்தினம் தலைமை வகிக்கிறார். சிக்ரி இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை, இறுதிநாளில் வேலூர் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன், கோவை காருண்யா பல்கலை., துணைவேந்தர் சுந்தர் மனோகரன் ஆராய்ச்சி குறித்து பேசுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us