ஆனந்தூர் மேல்நிலைப் பள்ளியில் திருவாடானை வட்டார விளையாட்டு போட்டிகள்
ஆனந்தூர் மேல்நிலைப் பள்ளியில் திருவாடானை வட்டார விளையாட்டு போட்டிகள்
UPDATED : ஆக 21, 2014 12:00 AM
ADDED : ஆக 21, 2014 11:13 AM
ஆர்.எஸ்.மங்கலம்: திருவாடானை வட்டார விளையாட்டு போட்டிகள் ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான குழு விளையாட்டு போட்டிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் நந்திவர்மன், ஒன்றிய கவுன்சிலர் இலக்குவன் போட்டிகளை துவக்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர் சேவியர்ராஜ் நடுவராக இருந்தார்.
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோகோ: முதலிடம் ஆனந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி. 2 ம் இடம் செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி.
14 வயதினருக்கான கோகோ: முதலிடம் செங்குடி புனித மிக்கேல் பள்ளி. 2ம் இடம் ஆனந்தூர் பள்ளி.
19 வயதிற்குட்பட்டவருக்கு கைப்பந்து: முதலிடம் திருப்பாலைக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. 2 ம் இடம் ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி.
17 வயதினருக்கான கைப்பந்து: முதலிடம் தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. 2 ம் இடம் சவேரியார்பட்டிணம் புனித சேவியர் உயர்நிலைப்பள்ளி.
எறிபந்து: முதலிடம் தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. 2ம் இடம் உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி.
19 வயதுக்குட்பட்ட கபாடி: முதலிடம்ஆண்டாவூரணி சிறுமலர் மேல்நிலைப்பள்ளி. 2ம் இடம் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
14 வயதுக்குட்பட்ட கபாடி: முதலிடம் காரங்காடு அமலன்னை உயர்நிலைப்பள்ளி. 2 ம் இடம் உப்பூர் அரசு உயர் நிலைப்பள்ளி.
17 வயதுக்குட்பட்ட கபாடி: முதலிடம் காரங்காடு அமலன்னை உயர்நிலைப்பள்ளி. 2 ம் இடம் சி.கே.மங்கலம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி.
