அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அமர்வதற்கான தளவாடப் பொருள் வழங்கல்
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அமர்வதற்கான தளவாடப் பொருள் வழங்கல்
UPDATED : ஆக 21, 2014 12:00 AM
ADDED : ஆக 21, 2014 11:16 AM
அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மணக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏமப்பூர் மாதிரிப் பள்ளியில் மாணவ, மாணவியர் உட்காருவதற்கு தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்களை எம்.எல்.ஏ., வெங்கடேசன் வழங்கினார். துளுக்கப்பாளையத்தில் 5 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்ட பூமி பூஜையில் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.
பின், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் ரேஷன் கடை கட்டுமானப் பணியை பார்வையிட்டார். ஏமப்பூர் துவக்கப் பள்ளியில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டிய புதிய சத்துணவு கூடத்தை எம்.எல்.ஏ., வெங்கடேசன் திறந்து வைத்தார்.
