தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விருதுநகர் மாவட்ட கல்வி நிறுவன நிகழ்ச்சிகள்

விருதுநகர் மாவட்ட கல்வி நிறுவன நிகழ்ச்சிகள்

விருதுநகர் மாவட்ட கல்வி நிறுவன நிகழ்ச்சிகள்


UPDATED : ஆக 21, 2014 12:00 AM

ADDED : ஆக 21, 2014 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2014 12:00 AM ADDED : ஆக 21, 2014 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொடக்க விழா: வெம்பக்கோட்டை:சிவகாசி பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறை மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா நடந்தது. கல்லூரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் மற்றும் அகாடமிக் இயக்குனர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். நான்காம் ஆண்டு மாணவர் காளிசங்கர்வரவேற்றார். மாணவன் யுவராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

கருத்தரங்கம்: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரியில், பெண்கள் உரிமை குழு சார்பாக, "இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில், விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மதுரை அரசு சாரா அமைப்பு ஆலோசகர் யாமினி தேவி பேசினார்.

பெண்கள் இன்றைய சமுதாயத்தில், தைரியமாகவும், அனைத்து விஷயங்களை கற்று கொள்ள தேவையானவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என விளக்கினார்.

சொற்பொழிவு: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில், பாட்டி தாத்தா மாணவர் குழுவின் சார்பில், "பாட்டியும், தாத்தாவும் நம்முடன்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.

வணிக மேலாண்மை துறை இணை பேராசிரியர் நாகராஜன் பேசுகையில், "முதியோர்களுக்கும், இளைஞர்களுக்கும் தலைமுறை இடைவெளி உள்ளது. இதனால் பாட்டி வைத்தியமுறை பல குடும்பங்களுக்கு சென்றடையவில்லை" என்றார்.

கே.வி.எஸ். பள்ளிக்கு கேடயம்: தமிழக அரசு 2013 - 2014 ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருதை, விருதுநகர் கே.வி.எஸ். நடுநிலை பள்ளிக்கு அறிவித்தது. இதற்கான கேடயத்தை, திண்டுக்கல் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி, பள்ளி செயலாளர் மதன் மோகனிடம் வழங்கினார்.

வளாகத்தேர்வில் 28 பேர் வெற்றி: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் மருந்தியல் கல்லூரியில் நடந்த வளாக தேர்வில், 28 மாணவர்கள் தேர்வு பெற்றனர். சென்னை மெட் பிளஸ் நிறுவன அதிகாரி வெங்கட் ரெட்டி , கல்லூரி முதல்வர் பழனிவேல் முன்னிலையில் நடந்த வளாகத்தேர்வில், 31 மாணவர்கள் கலந்து கொண்டனர். 28 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us