UPDATED : ஆக 21, 2014 12:00 AM
ADDED : ஆக 21, 2014 12:45 PM
புதுச்சேரி: அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு நடந்த 7ம் கட்ட கலந்தாய்வில், 130 இடங்கள் நிரம்பின.
புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கலை கல்லுாரி, இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லுாரி உள்ளிட்ட 6 அரசு கலை கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ., உள்ள இளங்கலை பாடப் பிரிவுகளில் உள்ள 2,108 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை (கப்பாஸ் ) மூலம் நடக்கிறது.
6 கட்ட கலந்தாய்வு முடிவில், 500 இடங்கள் காலியாக இருந்தன. 7ம் கட்ட கலந்தாய்வு பாரதிதாசன் கல்லுாரியில் நடந்தது. கலந்தாய்வில் பங்கேற்க, 280 மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப் பட்டிருந்தது.
இதில் 130 இடங்கள் நிரம்பின. தற்போது 370 இடங்கள் காலியாக உள்ளன. அடுத்த கட்ட கலந்தாய்வு, வரும் 25ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
