பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில் இறகுபந்து போட்டி
பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில் இறகுபந்து போட்டி
UPDATED : ஆக 22, 2014 12:00 AM
ADDED : ஆக 22, 2014 10:48 AM
கோவை: பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லுாரி மாணவ, மாணவியருக்கான இறகுபந்து போட்டி பல்கலை உள் விளையாட்டரங்கில் துவங்கியது. மாணவர் பிரிவில் 30 கல்லுாரிகளும், மாணவியர் பிரிவில் 20 கல்லுாரிகளும் பங்கேற்றன.
மாணவர் பிரிவு முதல் சுற்று: முதல் போட்டியில் கே.ஜி.கலை அறிவியல் கல்லுாரி 3-0 செட் கணக்கில் ஆர்.வி.எஸ்.,கல்லுாரியையும்; 2வது போட்டியில், கிருஷ்ணா கல்லுாரி 3-0 செட் கணக்கில் வி.எல்.பி.,கல்லுாரியையும்; 3வது போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி 3-0 செட் கணக்கில் கொங்கு கல்லுாரியையும்; 4வது போட்டியில் பாரதியார் பல்கலை 3-0 செட் கணக்கில் என்.ஐ.எஸ்.டி.,கல்லுாரியையும் வென்றன.
5வது போட்டியில், கோவை அரசு கல்லுாரி 3-1 செட் கணக்கில் ஊட்டி அரசு கல்லுாரியையும்; 6வது போட்டியில், சி.எம்.எஸ்.,கல்லுாரி 3-0 செட் கணக்கில் பார்க் கல்லுாரியையும் வென்றன.
மாணவியர் பிரிவு முதல் சுற்று முடிவு: முதல் போட்டியில் என்.ஜி.எம்.,கல்லுாரி 2-0 செட் கணக்கில் கோவை அரசு கல்லுாரியையும்; 2வது போட்டியில், ஜி.வி.டி.,கல்லுாரி 2-0 செட் கணக்கில் பிராவிடன்ஸ் கல்லுாரியையும்; 3வது போட்டியில் கோபி கல்லுாரி 2-0 செட் கணக்கில் ராமகிருஷ்ணா பெண்கள் கல்லுாரியையும் வென்றன.
4வது போட்டியில், நிர்மலா பெண்கள் கல்லுாரி 2-0 செட் கணக்கில் பாரதியார் பல்கலை அணியையும்; 5வது போட்டியில் நேரு கல்லுாரி 2-0 செட் கணக்கில் சி.எம்.எஸ்.,கல்லுாரியையும்; 6 வது போட்டியில் ஜி.ஆர்.டி.,கல்லுாரி 2-0 செட் கணக்கில் கொங்கு கல்லுாரியையும்; 7வது போட்டியில் எஸ்.என்.எஸ்., கல்லுாரி 2-0 செட் கணக்கில் கொங்கு கல்லுாரியையும் வென்றன.
