தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பார்வையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் கேரம், ஸ்னுாக்கர் விளையாடும் கருவி

பார்வையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் கேரம், ஸ்னுாக்கர் விளையாடும் கருவி

பார்வையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் கேரம், ஸ்னுாக்கர் விளையாடும் கருவி


UPDATED : ஆக 22, 2014 12:00 AM

ADDED : ஆக 22, 2014 12:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2014 12:00 AM ADDED : ஆக 22, 2014 12:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: உலகிலேயே முதன்முறையாக பார்வையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் கேரம், ஸ்னுாக்கர் விளையாடும் கருவியை தமிழகத்தை சேர்ந்த டாக்டர் மிலன்தாமஸ் கண்டுபிடித்துள்ளார்.

திண்டுக்கல்லில் மதர்மேரி கல்வி சேவை நிறுவனம் சார்பில் நடந்த விழாவில் பார்வையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் விளையாட புதிய கேரம் போர்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஹைலம் போர்டு மற்றும் கட்டையால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 குழிகள் உள்ளன. ஸ்டிரைகர் ஒரு பகுதி சற்று கூர்மையாக இருக்கும். இதை வைத்து அடித்து கருப்பு, வெள்ளை, சிவப்பு காயின்களை குழிகளில் இட வேண்டும்.

பார்வையற்றவர்களுக்காக கருப்பு காயினில் ஒரு பக்கம் பள்ளமாகும். வெள்ளை காயினில் இரண்டு பக்கமும் ஒரே மாதிரியாகவும், சிவப்பு காயினுக்கு இரண்டு பக்கமும் பள்ளமாக அமைந்து உள்ளது. இந்த போர்டு ரூ.3,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டாக்டர் மிலன்தாமஸ் கூறியதாவது: சென்னை நேஷனல் இன்டிடியூட் ஆப் விசுவல் ஹேண்டிகேப் நிறுவனத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக பணிபுரிந்தேன். 2012 ல் ஓய்வு பெற்றேன். தமிழகத்தை சேர்ந்த நான், ஒய்வுக்கு பின்பு ஜதராபத்தில் தங்கி உள்ளேன்.

பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் முதியோர் ஆகியோர் மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக கேரம் போர்டை கண்டுபிடித்தேன். இது உலகத்திலேயே முதன்முறை.

தற்போது இந்தியாவிலேயே திண்டுக்கல்லில்தான் அறிமுகம் செய்துள்ளேன். முதல் கட்டமாக, 30 போர்டுகளை தயாரித்துள்ளேன். இதில் ஸ்னுாக்கரும் விளையாடலாம். முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us