பதிவுசெய்யாத மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம், பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை
பதிவுசெய்யாத மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம், பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை
UPDATED : ஆக 23, 2014 12:00 AM
ADDED : ஆக 23, 2014 11:14 AM
அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பதிவு செய்யாத மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள், இல்லங்கள் மற்றும் பள்ளிகள் நடத்திவருவோர், அவற்றை மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை பதிவு செய்யாதவர்கள், உரிய ஆவணங்களுடன், தஞ்சை மேம்பாலம் அருகில் இயங்கிவரும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு விண்ணப்பித்து, பதிவு சான்றிதழ் பெறவேண்டும். பதிவு சான்றிதழ் இல்லாமல் இயக்கும் நிர்வாகிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவித்துள்ளார்.
