நியூசிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு
நியூசிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு
UPDATED : ஆக 23, 2014 12:00 AM
ADDED : ஆக 23, 2014 03:14 PM
மும்பை: நியூசிலாந்து சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று இந்தியாவிற்கான அந்நாட்டு ஹை கமிஷனர் கிரகாம் மார்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தாண்டு ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களுக்கு இடையிலான காலகட்டத்தில், இந்திய மாணவர்களுக்கான விசா வழங்கல், பெரியளவில் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு, இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டால், இது 83% அதிகம். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, 2014ம் ஆண்டில், இந்திய மாணவர்களுக்கு, நியூசிலாந்தில் படிப்பதற்கான விசா வழங்கல், 123% என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்திய - நியூசிலாந்து உறவில், எங்கள் நாட்டின் பொருளாதார நலன்களும் பெரியளவில் அடங்கியுள்ளன. உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக திகழும் இந்தியா, எங்கள் நாட்டிற்கான முக்கிய ஏற்றுமதி சந்தையாக திகழ்கிறது.
கடந்த 2013ம் ஆண்டில், மொத்தம் 11,984 இந்திய மாணவர்கள், நியூசிலாந்தில் படித்தனர். இது, எங்கள் நாட்டின் மொத்த வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையில் 12% ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
