UPDATED : ஆக 23, 2014 12:00 AM
ADDED : ஆக 23, 2014 02:54 PM
தியாகராயா கல்லூரியின் வரலாற்றுத்துறை இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்தியது. இந்த விழாவில், அக்கல்லூரியின் இளநிலை மற்றும் முதுநிலை வரலாற்றுத்துறை மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லூரி செயலாளர் டாக்டர்.தியாகராயன் கலந்துகொண்டு, ஒரு மனிதன் தன்னைப் பற்றிய வரலாற்றை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தான் யார், தன் குடும்பம் என்ன மற்றும் தனது பரம்பரை என்ன என்ற வரலாற்றை தெரிந்துகொள்வது மிக மிக அத்தியாவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி, சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், வரலாற்றுத்துறை மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சென்னை தின விழாவையொட்டி, ஆகஸ்ட் 20ம் தேதி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கான பரிசுகளும் இவ்விழாவில் வழங்கப்பட்டன.
இவ்விழாவின் சிறப்பம்சமாக, வடசென்னை புறக்கணிக்கப்படுகிறதா? என்பது குறித்த பட்டிமன்றமும் நடைபெற்றது. சென்னை நகரின் கடந்தகால தோற்றங்கள் குறித்து, பல புகைப்படங்கள் மாணவர்களுக்கு காட்டப்பட்டன.
தியாகராயா கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் டாக்டர்.நாகேஸ்வர ராவ் பேசுகையில் "மாணவர்கள், அவரவர் வாழும் பகுதிகளின் வரலாற்றை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்" என்று வலியுறுத்தினார்.
