UPDATED : ஆக 25, 2014 12:00 AM
ADDED : ஆக 25, 2014 01:14 PM
திருப்பூர்: பிளஸ் 2 தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தோர், இன்று முதல் ஆன்-லைனில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 2 தனித்தேர்வு, வரும் செப்., 25ல் துவங்கி, அக்., 9 வரை நடக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், இன்று (25ம் தேதி) முதல், www.tndge.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்திஉள்ளது.
அதன்படி, www.tndge.in என்ற இணையதள முகவரியில் சென்று, HIGHER SECONDARY EXAM SEPTEMBER/OCTOBER - 2014 PRIVATE CANDIDATE HALL TICKT PRINT OUTGßÓ வார்த்தைகளை கிளிக் செய்தால், அப்போது தோன்றும் பக்கத்தில், விண்ணப்ப எண், பிறந்தநாள் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.
பின், திரையில் தோன்றும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், மீண்டும் செய்முறை, எழுத்துத்தேர்வுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். முதல் முறையாக பிளஸ் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், மொழி பாடத்தாள், சிறப்பு தமிழ் தாள் எழுத வேண்டும்; கேட்டல் மற்றும் பேசுதல் திறன் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும்.
இத்தேர்வு நடக்கும் தேதி விவரங்களை, தேர்வு எழுதும் மைய முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, தனித்தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம். பிளஸ் 2 தனித்தேர்வு எழுத, சிறப்பு அனுமதியின் கீழ், தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் நாட்கள் குறித்த விவரத்தை, அரசு தேர்வுகள் இயக்ககம் விரைவில் அறிவிக்க உள்ளது.
