கால்பந்து போட்டியில் திறமையை வெளிப்படுத்தும் கல்லூரி அணிகள்
கால்பந்து போட்டியில் திறமையை வெளிப்படுத்தும் கல்லூரி அணிகள்
UPDATED : ஆக 25, 2014 12:00 AM
ADDED : ஆக 25, 2014 01:17 PM
கோவை: கோவை கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்து வரும் கால்பந்து போட்டியில், அணிகள், தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளன.
சென்னை அண்ணா பல்கலை, கோவைப்புதுார் கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், 10வது மண்டல பொறியியல் கல்லுாரிகளுக்கான கால்பந்து போட்டி நடந்து வருகிறது. நேற்று, கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, எஸ்.வி.எஸ்., ஆர்க்கிடெக்சர் கல்லுாரியை வென்றது.
கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியை சேர்ந்த பிரதீப், ப்ரூனோ, சஞ்சீவ், ஸ்ருவித் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். அக்ஷயா, ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி அணிகள் மோதிய ஆட்டத்தில், அக் ஷயா கல்லுாரி அணி டை பிரேக்கர் முறையில் வெற்றி பெற்றது.
மூன்றாவது போட்டியில், கற்பகம் தொழில்நுட்பக் கல்லுாரி அணி, டாக்டர் மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வென்றது. இந்த அணியை சேர்ந்த அசோக்குமார் இரண்டு கோல்களும், ஜெகதீசன், நவீன்குமார் ஆகியோர் ஒரு கோல்களும் அடித்தனர்.
சி.எம்.எஸ்., ஏ.எஸ்.எல்., பால் அணிகள் மோதிய ஆட்டத்தில், விஜய், சாரங்க் தலா ஒரு கோல்களை அடித்து, ஏ.எஸ்.எல்., பால் அணியை வீழ்த்தினர். சி.ஐ.இ.டி., அணி டைபிரேக்கர் முறையில், கலைவாணி கல்லுாரி அணியை வென்றது. என்.ஐ.இ.டி., அணி, எஸ்.வி.எஸ்., கல்லுாரி அணியை வீழ்த்தியது.வரும் 26ம் தேதி, காலிறுதிப் போட்டியும், 27ம் தேதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
