அரசு தொடக்கப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்
அரசு தொடக்கப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்
UPDATED : ஆக 26, 2014 12:00 AM
ADDED : ஆக 26, 2014 11:01 AM
கமுதி: கமுதி ஒன்றியம் வெள்ளாங்குளம் அரசு தொடக்கப் பள்ளியில், 3 மாணவர்களுக்கு, 2 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
வெள்ளாங்குளத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆனால், 5 ம் வகுப்பில் ஒரு மாணவனும், ஒரு மாணவி என இருவரும், 4 ம் வகுப்பில் ஒரு மாணவி என மொத்தம் 3 பேர்களே படிக்கின்றனர். அடுத்த ஆண்டு 5ம் வகுப்பு மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு சென்றுவிட்டால், இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் இருப்பார் என, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பஸ் போக்குவரத்தும் இல்லாத இந்த கிராமத்தில், பணிபுரிவது கடினம் என ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி தொடர்ந்து செயல்படவும், அதிக மாணவ, மாணவிகளை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
