UPDATED : ஆக 26, 2014 12:00 AM
ADDED : ஆக 26, 2014 11:30 AM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் சாணக்கியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எக்சைடு லைப் இன்சூரன்ஸ் சார்பில் சுதந்திர தின வினாடி - வினா போட்டி நடந்தது.
பள்ளி முதல்வர் வெண்ணிலா தலைமை தாங்கினார். எக்சைடு லைப் இன்சூரன்ஸ் புதுச்சேரி கிளை மேலாளர் விக்னேஷ், முதன்மை ஆலோசகர் கலில்பாஷா முன்னிலை வகித்தனர்.
5 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை நடந்த போட்டியில், 160 மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவர்களுக்கு கோப்பை, மற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
