இ.எஸ். கல்லூரி மாணவர்கள் மண்டல கைப்பந்து போட்டியில் வெற்றி!
இ.எஸ். கல்லூரி மாணவர்கள் மண்டல கைப்பந்து போட்டியில் வெற்றி!
UPDATED : ஆக 26, 2014 12:00 AM
ADDED : ஆக 26, 2014 12:48 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்.பொறியியல் கல்லூரி மாணவர்கள், மண்டல கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றனர்.
அண்ணா பல்கலைக் கழக மண்டல அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள், கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வந்தவாசி, கே.ஆர். எஸ். பொறியியல் கல்லூரியில் நடந்தன. இதில், மண்டல அளவில் 17 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டியில், விழுப்புரம் இ.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடத்தை பிடித்து, வெற்றி கோப்பை மற்றும் பதக்கங்களை பெற்றனர். மண்டல போட்டியில் வெற்றி பெற்ற இ.எஸ்., கல்லூரி மாணவர்களை, கல்லூரி செயலாளர் செல் வமணி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
