ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரிகளுக்கான கணினி, சுருக்கெழுத்து பயிற்சிகள்
ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரிகளுக்கான கணினி, சுருக்கெழுத்து பயிற்சிகள்
UPDATED : ஆக 26, 2014 12:00 AM
ADDED : ஆக 26, 2014 11:34 AM
புதுச்சேரி: ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரிகளுக்கான கணினி, சுருக்கெழுத்து பயிற்சிகள் துவங்கியது.
ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் எஸ்.சி.எஸ்.டி., பிரிவிற்கான ஆலோசனை மையம் இயங்கி வருகிறது. இங்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்கள் தொழிற் பயிற்சி பயில சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தாண்டு கணிணி சுருக்கெழுத்து பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி சுருக்கெழுத்து பயிற்சியைத் துவக்கி வைத்தார். அமைச்சர் ராஜவேலு கணினி பயிற்சியைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பாட்கோ சேர்மன் பிரசாந்த்குமார், தொழிலாளர் துணை ஆணையர் தம்மு கணபதி, வேலைவாய்ப்பு மைய அதிகாரி அனிதா, துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி உமா சங்கரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாதவதாஸ் நன்றி கூறினார்.
