வாழ்க்கை உயர்வுக்கு காரணமான நூலகம் இன்று இடியும் அபாயத்தில்...
வாழ்க்கை உயர்வுக்கு காரணமான நூலகம் இன்று இடியும் அபாயத்தில்...
UPDATED : ஆக 27, 2014 12:00 AM
ADDED : ஆக 27, 2014 12:46 PM
சோழவந்தான்: சோழவந்தானில் பலரது வாழ்க்கை உயர்வுக்கு காரணமாக இருந்த நூலகம் இன்று இடியும் அபாயத்தில் உள்ளது.
இங்குள்ள இரட்டை அக்ரஹாரத்தில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில் கிளை நூலகம் செயல்படுகிறது. சிறிய இடம் என்பதால் நூல்கள் மர அலமாரிகளில் அடுக்கப்பட்டும், மற்றவை, இடமின்றி தரையில் குவித்தும் வைத்துள்ளனர். இதனால் நூல்கள் கரையானுக்கு இரையாகும் அபாயம் உள்ளது.
கட்டடம் பராமரிப்பின்றி சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடியும் அபாயத்தில் உள்ளது. விரிசல் வழியாக மழைநீர் புகுந்து நூல்கள் நனைந்து பாழாகின்றன. அதிகாரிகளுக்கு, வாசகர்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன் கட்டடம் கட்ட நூலக துறை நிதி ஒதுக்கியது.
ஆனால், பேரூராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்காததால் நிதி வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. விபத்து ஏற்படும் முன் புதுக்கட்டடம் கட்ட பேரூராட்சி இடம் வழங்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளில் நூலகத்துறை ஈடுபட வேண்டும்.
