மதுரையில் செப்., 1 முதல் 15 வரை கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் கருத்தரங்கம்
மதுரையில் செப்., 1 முதல் 15 வரை கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் கருத்தரங்கம்
UPDATED : ஆக 27, 2014 12:00 AM
ADDED : ஆக 27, 2014 12:58 PM
மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகாலில் செப்., 1 முதல் 15 வரை நடக்கும் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் கருத்தரங்கில், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம், என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது: இக்கருத்தரங்கில் தொல்லியல் மற்றும் வரலாற்று துறை அறிஞர்கள் பங்கேற்கின்றனர். தமிழ் பிராமி கல்வெட்டு, வட்டெழுத்து கல்வெட்டு, கிரந்த கல்வெட்டு, இவற்றின் தோற்றம், வளர்ச்சி, அகழாய்வுகள் குறித்து வகுப்புகள் நடக்கின்றன. அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை ரசாயன முறையில் பாதுகாக்கும் முறை குறித்த செய்முறை விளக்க வகுப்புகளும் நடைபெறும்.
விருப்பமுள்ள பேராசிரியர்கள், முதுகலை ஆய்வு மாணவர்கள், தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆர்வலர்கள் தங்களை குறித்த சுய விபரங்களுடன், முதல்வர்கள் அல்லது கல்லூரி துறை தலைவர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்கலாம். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் குறிப்பிட்ட நபர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
விபரங்களுக்கு 0452 233 8992ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
