புத்தக கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலைப் போட்டிகள்
புத்தக கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலைப் போட்டிகள்
UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 10:46 AM
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், ஆக., 29 முதல் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலைப் போட்டிகள் நடக்கின்றன.
ஆக., 31ல் காலை 10 மணிக்கு தமுக்கம் கலையரங்கில் 5, 10 வயது வரையிலான மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெறுகிறது. செப்., 3 ல் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடக்கிறது. போட்டி நடக்கும் இடத்தில் தலைப்பு அறிவிக்கப்படும்.
செப்., 4ல் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்வது துணிந்து செய் என்ற தலைப்பிலும், பிளஸ் 1, பிளஸ் 2 விற்கு தமிழை என்னுயிர் என்பேன் என்ற தலைப்பிலும் பேச்சுப் போட்டி நடக்கிறது.
ஒவ்வொரு பிரிவு போட்டிக்கும், ஒரு பள்ளியில் இருவர் பங்கேற்கலாம். பங்கேற்க தலைமையாசிரியர், முதல்வர் கடிதத்துடன் விண்ணப்பங்களை ஒருங்கிணைப்பாளர், சர்வோதய இலக்கிய பண்ணை, மேல வெளிவீதி, மதுரை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு முதல்பரிசு ரூ.3,000, 2ம் பரிசு ரூ.2,000, 3ம் பரிசு ரூ.1,000 என பரிசுத் தொகை கூப்பன்களாக வழங்கப்படும். இதன்மூலம், புத்தகத் திருவிழாவில் விரும்பிய புத்தகங்களை மாணவர்கள் வாங்கிக் கொள்ளலாம். போட்டி தொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு 94435 72224 ல் தொடர்பு கொள்ளலாம்.
