UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 10:49 AM
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்கள், கல்வி உதவித் தொகை தரக்கோரியும், அரசு கட்டணம் வசூலிக்கக்கோரியும், கடந்த 7ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டதால் போராட்டம் பிசுபித்தது. கடந்த, 22ம் தேதி, பொறியியல் மற்றும் வேளாண் துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கப்பட்டது.
இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகுப்புகளும் துவங்கியது. மாணவர்கள் பிரச்னை மீண்டும் தலை தூக்கும் என்ற அச்சத்தில், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் உள்ள வாயில்கள் சீல் வைக்கப்பட்டு 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவியர் மற்றும் ஊழியர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால், பல்கலை வளாகம் பரபரப்புடன் இருந்தது.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: பல்கலையில், இதற்கு முன்பும், இதுபோல் மாணவர் பிரச்னை எழுந்துள்ளது. அப்போதெல்லாம், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணப்பட்டது. தற்போது, கடும் போலீஸ் பாதுகாப்புடன், மாணவ, மாணவிகளை சோதனை செய்து கல்லூரிக்குள் அனுமதிக்கும் விதம் நிர்வாகத்தின் அடக்கு முறையைக் காண்பிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
