பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் தடாகம் அரசு பள்ளி வெற்றி
பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் தடாகம் அரசு பள்ளி வெற்றி
UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 10:53 AM
கோவை: மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில், சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலை பள்ளியும், தடாகம் அரசு பள்ளியும் வெற்றி பெற்றன.
சரவணம்பட்டி பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், மாவட்ட அளவில் பள்ளி மாணவருக்கான வாலிபால் போட்டிகள் நடக்கின்றன. 25 அணிகள் பங்கேற்றன. பி.பி.ஜி., கல்வி நிலையங்கள் செயலாளர் அசின் போட்டியை துவக்கினார். 2வது சுற்று முதல் போட்டியில், சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளி 2-0 செட் கணக்கில் மேட்டுப்பாளையம் அரசு பள்ளியையும், 2வது போட்டியில், தடாகம் அரசு பள்ளி 2-0 செட் கணக்கில் ஜெயேந்தி ரசரஸ்வதி பள்ளியையும், 3வது போட்டியில், கோபால்நாயுடு பள்ளி 2-0 செட் கணக்கில் மத்வராயபுரம் அரசு பள்ளியையும் வென்றன.
4வது போட்டியில் இஸ்லாமியா பள்ளி 2-0 செட் கணக்கில் ஆனைக்கட்டி அரசு பள்ளியையும், 5வது போட்டியில், ராமகிருஷ்ணா பள்ளி 2-1 செட் கணக்கில் தர்மசாஸ்தா பள்ளியையும் வென்றன. முன்னதாக நடந்த முதல் சுற்று போட்டியில், மத்வராயபுரம் அரசு பள்ளி 2-0 செட் கணக்கில் குரும்பபாளையம் அரசு பள்ளியையும்; 2வது போட்டியில், ராமசாமிநாயுடு பள்ளி 2-0 செட் கணக்கில் பாண்டிமாநகர் அரசு பள்ளியையும், 3வது போட்டியில், ஏ.பி.சி., பள்ளி 2-0 செட் கணக்கில் புனித மைக்கேல் பள்ளியையும் வென்றன. இன்று மாணவியருக்கான போட்டிகள் துவங்குகின்றன.
