தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான திறன் அடைவுத்தேர்வில் 1,260 மாணவர்கள் பங்கேற்பு

மாநில அளவிலான திறன் அடைவுத்தேர்வில் 1,260 மாணவர்கள் பங்கேற்பு

மாநில அளவிலான திறன் அடைவுத்தேர்வில் 1,260 மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : ஆக 28, 2014 12:00 AM

ADDED : ஆக 28, 2014 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2014 12:00 AM ADDED : ஆக 28, 2014 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான திறன் அடைவுத்தேர்வில், 42 பள்ளிகளில், 1,260 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (எஸ்.ஈ.ஆர்.டி.,) துறை சார்பில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், (ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியரின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப்பாடத்தில் திறன் அடைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, தமிழகமெங்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, திறன் அடைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது. அதில், ஒவ்வொரு பள்ளிகளிலும் 30 மாணவ, மாணவியர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 பள்ளிகளில் நடந்த திறன் அடைவுத்தேர்வில்  1,260 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுனர்களின் மேற்பார்வையில் நடந்த இந்த தேர்வில், காலையில் தமிழ், ஆங்கில பாடத்தேர்வும், பிற்பகலில் கணித பாட தேர்வும் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us