தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனித்தேர்வர்களிடம் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

தனித்தேர்வர்களிடம் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

தனித்தேர்வர்களிடம் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஆக 28, 2014 12:00 AM

ADDED : ஆக 28, 2014 11:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2014 12:00 AM ADDED : ஆக 28, 2014 11:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: பிளஸ் 2 செப்., அக்., 2014 தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க வசதியாக ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்டத்தில், ஆறு சிறப்பு மையங்கள் (நோடல் சென்டர்கள்) அரசு தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரத்தில் ஆண்களுக்கு செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, பெண்களுக்கு புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண், பெண்களுக்கு திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. பரமக்குடியில் ஆண்களுக்கு கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பெண்களுக்கு சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, ஆண், பெண்களுக்கு முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகள் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இம்மையங்களில், தனித்தேர்வர்கள் செப்.,1, 2ல் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்துடன், சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.ஆயிரம், பதிவு கட்டணம் ரூ.50ஐ பணமாக செலுத்த வேண்டும் என ராமநாதபுரம் முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us