UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 11:29 AM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி: எஸ்.புதூர் ஒன்றியம், கொண்டபாளையம் நடுநிலைப் பள்ளி, சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு பெற்றதற்காக பாராட்டு விழா நடந்தது.
உதவி கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரகுராமன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சுகந்தி வரவேற்றார். ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் ராதா கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஈட்டிகோன், கிராம கல்வி குழு தலைவர் கவிதா, ஊராட்சி தலைவர் காந்திமதி பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
