தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாகனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார விளையாட்டு போட்டி

பாகனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார விளையாட்டு போட்டி

பாகனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார விளையாட்டு போட்டி


UPDATED : ஆக 28, 2014 12:00 AM

ADDED : ஆக 28, 2014 11:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2014 12:00 AM ADDED : ஆக 28, 2014 11:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகனேரி: சிவகங்கை வட்டார அளவிலான விளையாட்டு போட்டி, பாகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது.

ஹாக்கி: வயது 14க்குட்பட்ட மாணவர்கள் போட்டியில், முதலிடம் சிவகங்கை சுவாமி விவேகானந்தா பள்ளி, 2ம் இடம் சிவகங்கை புனித ஜோசப் பள்ளி. வயது 17க்கு உட்பட்ட மாணவர்கள் போட்டியில், முதலிடம் சிவகங்கை புனித ஜோசப் பள்ளி, 2ம் இடம் சுவாமி விவேகானந்தா பள்ளிகள் பெற்றன. வயது 19க்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் சிவகங்கை புனித ஜோசப் பள்ளி, 2ம் பரிசு மன்னர் மேல்நிலைப்பள்ளி பெற்றன.

கால்பந்து: மாணவர்களுக்கான வயது 14 போட்டியில், முதலிடம் நாட்டரசன்கோட்டை எஸ்.ஆர்.எம்., பள்ளி, 2ம் இடம் மன்னர் மேல்நிலைப் பள்ளி, வயது 17 பிரிவில், முதலிடம் மன்னர் மேல்நிலைப்பள்ளி, 2ம் இடம் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றன. வயது 19 பிரிவினர் போட்டியில், முதலிடம் மன்னர் மேல்நிலைப்பள்ளி, 2ம் பரிசு 21ம் நூற்றாண்டு மெட்ரிக்., பள்ளி பெற்றது.

வாலிபால்: வயது 14, 17, 19 பிரிவிற்குட்பட்ட மாணவிகள் போட்டி நடந்தது. இம்மூன்று பிரிவு போட்டிகளிலும், முதலிடத்தை புனித ஜஸ்டின் மகளிர் பள்ளியும், 2வது இடத்தை சாம்பவிகா பள்ளியும் பெற்றது. மாணவர் பிரிவில், வயது 14 பிரிவு முதலிடம் சாம்பவிகா பள்ளி, 2ம் இடம் ஒக்கூர் சோமசுந்தரம் செட்டியார் பள்ளி, வயது 17 பிரிவில் முதலிடம் ஒக்கூர் புனித ஜோசப் பள்ளி, 2ம் பரிசு ஒக்கூர் சோமசுந்தரம் செட்டியார் பள்ளி, வயது 19 பிரிவில், முதலிடம் ஒக்கூர் சோமசுந்தரம்செட்டியார் பள்ளி, 2ம் இடம் சிவகங்கை சாம்பவிகா பள்ளிகள் பெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us