UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 01:04 PM
அ நிறம் | அளவு
சென்னை: ஏற்கனவே பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், தொடக்கக் கல்வித்துறைக்கு தேவையான, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.
வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களுடன், பட்டியல் வெளியாகி உள்ளது.
1,500க்கும் மேற்பட்டோர், பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், பள்ளிக் கல்வித்துறைக்கு, கூடுதலாக 87 தமிழ் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலையும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
