UPDATED : ஆக 30, 2014 12:00 AM
ADDED : ஆக 30, 2014 11:06 AM
தேனி: தேனி சுப்பன் தெருவில் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் தமிழ்பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் தேனி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜா கூறியதாவது:
நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இளநிலை பட்ட படிப்பான பி.ஏ., தமிழ், வரலாறு,ஆங்கிலம், தமிழிசை, பி.காம், உளவியல்,பொதுநிர்வாகம் மற்றும் பி.எஸ்.சி., புவியியல், கணிதம், எம்.பி.ஏ., நூலக அறிவியல் போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
பட்டயபடிப்புகளான இசை, யோகா, பரதநாட்டியம் ஆசிரியர் உள்ளிட்ட படிப்புகளுக்கும். சான்றிதழ் படிப்புகளான இசை, கருவி இசை, நூலக அறிவியல் போன்ற படிப்புகளுக்கும் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பி.எட்.,க்கு இணையான தமிழ்புலவர் பயிற்சி என்ற சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.
பி.லிட்., படித்தவர்கள் மட்டும் படிக்க முடியும். இந்த பயிற்சிமுடித்து பி.எட்., படிக்காமல், டி.இ.டி., தேர்வில் தாள்-2 எழுதலாம். நாளை (ஆக.31) கடைசிநாளாகும். பாடப்புத்தகங்கள் அனைத்தும் தமிழில் வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கப்படும்.
