தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சரக அளவிலான விளையாட்டு போட்டிகள்

சரக அளவிலான விளையாட்டு போட்டிகள்

சரக அளவிலான விளையாட்டு போட்டிகள்


UPDATED : ஆக 30, 2014 12:00 AM

ADDED : ஆக 30, 2014 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2014 12:00 AM ADDED : ஆக 30, 2014 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

இதையொட்டி, இம்மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அதியமான் பள்ளியில் நடந்த இந்த விழாவில் கூடைப்பந்து மற்றும் கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு பள்ளி தாளாளர் திருமால்முருகன், துணை முதல்வர் கலைமணி, சரவணன், நிர்வாக அலுவலர் கணபதிராமன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

இதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடந்த விழாவில், கோகோ மற்றும் கபடி போட்டியில் முதலிடம் பிடித்த அணியை சேர்ந்த மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர் பொன்னுசாமி, உதவி தலைமை ஆசிரியர்கள் சுப்பிரமணி, நிர்மலா, சிதம்பரம், ஆசிரியர் கணேசன் உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us