தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை


UPDATED : ஆக 30, 2014 12:00 AM

ADDED : ஆக 30, 2014 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2014 12:00 AM ADDED : ஆக 30, 2014 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மாட்டியாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 2013-14ல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

இதில், 468 மதிப்பெண்கள் பெற்று, மாணவர் விஜயகுமார் முதல் இடமும், 463 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ராணி இரண்டாம் இடமும், 451 மதிப்பெண்கள் பெற்ற மீனா மூன்றாம் இடமும் பிடித்தனர். இவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.

முதல் இடம் பிடித்த மாணவர் விஜயகுமாருக்கு, 8,000 ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த மாணவி வாணிக்கு, 2,000 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த மாணவி ராணிக்கு, 2,000 ரூபாயும், நான்காம் இடம் பிடித்த மாணவி மீனாவுக்கு, 1.000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. விழாவில், அறிவியல் ஆசிரியர் ராமன், மாட்டியாம்பட்டி மாதையன், பள்ளி தலைமை ஆசிரியர் சின்னமாது ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

இந்தியன் வங்கி புலிகரைப்பட்டி மேலாளர் ராமன், மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் குறித்து பேசினார். கணித ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us