UPDATED : ஆக 30, 2014 12:00 AM
ADDED : ஆக 30, 2014 11:13 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி, இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இக்கண்காட்சியில், 199 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது படைப்புக்களை பார்வைக்காக வைத்திருந்தனர்.
இதில், நல்லம்பள்ளி யூனியன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேல்பூருக்கல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயின், சோலார் டிரேக்கிங் சிஸ்டம் படைப்பு, முதல் இடத்தை பிடித்தது.
மாணவியை பாராட்டி, சி.இ.ஓ., மகேஸ்வரி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சீமான், மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், வேலூர் அறிவியல் தொழில்நுட்ப அலுவலர் பழனிசாமி, நல்லம்பள்ளி யூனியன் உதவி தொடக்க கல்வி அலுவலர் பழனிசாமி ஆகியோர் பரிசு வழங்கினர். மாணவி ஜெயஸ்ரீயை, பள்ளியின் தலைமை ஆசிரியர் அஞ்சலா, பள்ளியின் உதவி ஆசிரியர்கள் சக்திவேல், சிவனேசன், மஞ்சுநாதன், ஆசிரியை சுகுணா உள்பட பலர் பாராட்டினர்.
