தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கான தடகள போட்டி

பள்ளிகளுக்கான தடகள போட்டி

பள்ளிகளுக்கான தடகள போட்டி


UPDATED : ஆக 30, 2014 12:00 AM

ADDED : ஆக 30, 2014 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2014 12:00 AM ADDED : ஆக 30, 2014 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை கல்வி மாவட்ட கிழக்கு குறுமைய அனைத்து பள்ளிகளுக்கான தடகள போட்டி மாணவர் பிரிவில் சி.ஆர்.ஆர்.,மெட்ரிக் பள்ளியும், மாணவியர் பிரிவில் பி.எஸ்.ஜி.ஜி., கன்யாகுருகுலம் பள்ளியும் சாம்பியன் பட்டம் வென்றன.

கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் கோவை கல்வி மாவட்ட 380 பள்ளிகளை எட்டு குறுமையங்களாக பிரித்து தடகள போட்டிகள் நடக்கின்றன. இதில் சூலூர், கோவை-அ, கோவை-ஆ , கோவை மேற்கு, வடக்கு, தெற்கு குறுமைய போட்டிகள் முடிந்த நிலையில், கிழக்கு குறுமைய 45 பள்ளிகளை சேர்ந்த 1,521 மாணவ, மாணவியருக்கான தடகள போட்டிகள் கோபால்நாயுடு பள்ளி சார்பில் நேரு ஸ்டேடியத்தில் இரண்டு நாட்களாக நடந்தன. மாணவ, மாணவியருக்கு தனியே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றோர்:

மாணவர் தனிநபர் சாம்பியன்கள்
14 வயது ஜூனியர் பிரிவில், ஆர்.ஜே.,மெட்ரிக் பள்ளி அகஸ்டின் அஜி மற்றும் வெங்கடலட்சுமி பள்ளி நவீன் தலா 10 புள்ளிகள்; 17 வயது சீனியர் பிரிவில், சி.ஆர்.ஆர்.,பள்ளி கவுதம் 18 புள்ளிகள்; 19 வயது சூப்பர் சீனியர் பிரிவில், வெங்கடலட்சுமி பள்ளி இஷாஜ் 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

மாணவர் பள்ளிகள் சாம்பியன்கள்
14 வயது பிரிவில், ஆர்.ஜே.,மெட்ரிக் பள்ளி 36 புள்ளிகளும்; 17 வயது பிரிவில், சி.ஆர்.ஆர்.,மெட்ரிக் பள்ளி 44 புள்ளிகளும்; 19 வயது பிரிவில், வெங்கடலட்சுமி பள்ளி 42 புள்ளிகளும் பெற்றன. சி.ஆர்.ஆர்.,மெட்ரிக் பள்ளி 50 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

மாணவியர் தனிநபர் சாம்பியன்கள்
14 வயது ஜூனியர் பிரிவில், பி.எஸ்.ஜி.ஜி.,கன்யாகுருகுலம் பள்ளி காயத்ரி 10 புள்ளிகள்; 17 வயது சீனியர் பிரிவில், பி.எஸ்.ஜி.ஜி.,கன்யாகுருகுலம் பள்ளி 15 புள்ளிகள்; சி.ஆர்.ஆர்.,மெட்ரிக் பள்ளி நந்தினி 20 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

மாணவியர் பள்ளிகள் சாம்பியன்கள்
14 வயது பிரிவில், பி.எஸ்.ஜி.ஜி.,கன்யாகுருகுலம் பள்ளியும்; 17 வயது பிரிவில், பி.எஸ்.ஜி.ஆர்.,கிருஷ்ணம்மாள் பள்ளியும் தலா 37 புள்ளிகளும்; 19 வயது பிரிவில், பி.எஸ்.ஜி.ஜி.,கன்யாகுருகுலம் பள்ளி 50 புள்ளிகளும் பெற்றன. பி.எஸ்.ஜி.ஜி.,கன்யாகுருகுலம் பள்ளி 60 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us