தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இறகுப்பந்து போட்டி: பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்

இறகுப்பந்து போட்டி: பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்

இறகுப்பந்து போட்டி: பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்


UPDATED : ஆக 30, 2014 12:00 AM

ADDED : ஆக 30, 2014 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2014 12:00 AM ADDED : ஆக 30, 2014 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாரதியார் பல்கலை அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான இறகுப்பந்து போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான இறகுப்பந்து போட்டி, பல்கலை உள் விளையாட்டரங்கில் தனித்தனியே ’நாக்அவுட்-லீக்’ முறையில் நடந்தன.

மாணவர் பிரிவு:
இறுதி லீக் போட்டியில்-பி.எஸ்.ஜி., கல்ல்லூரி 3-0 செட் கணக்கில் சி.எம்.எஸ்., கல்லூரியையும், 2வது போட்டியில் 3-0 செட் கணக்கில் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியையும், 3வது போட்டியில் ஜி.ஆர்.டி., அறிவியல் கல்லூரியையும் வென்று முதலிடம் பிடித்தது.

கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி 3-1 செட் கணக்கில் சி.எம்.எஸ்., கல்லூரியையும், மற்றொரு போட்டியில், கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி 3-0 செட் கணக்கில் ஜி.ஆர்.டி., கல்லூரியையும் வென்று 2ம் இடத்தை பிடித்தது.

சி.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லூரி 3-1 செட் கணக்கில், ஜி.ஆர்.டி., கல்லூரியை வென்று மூன்றாமிடம் பிடித்தது.

மாணவியர் பிரிவு:

இறுதி லீக் போட்டியில்- பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி 2-0 செட் கணக்கில் நிர்மலா கல்லூரியையும், 2வது போட்டியில், 2-0 செட் கணக்கில் ஜி.வி.ஜி.,கல்லூரியையும், 3வது போட்டியில் 2-0 செட் கணக்கில் நேரு கலை அறிவியல் கல்லூரியையும் வென்று, முதலிடம் பிடித்தது.

நேரு கலை அறிவியல் கல்லூரி 2-1 செட் கணக்கில் ஜி.வி.ஜி., விசாலாட்சி கலை அறிவியல் கல்லூரியையும், மற்றொரு போட்டியில், 2-0 செட் கணக்கில் நிர்மலா கல்லூரியையும் வென்று இரண்டாமிடம் பிடித்தது.

ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லூரி 2-0 செட் கணக்கில் நிர்மலா பெண்கள் கல்லூரியை வென்று, மூன்றாமிடம் பிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us