அங்கன்வாடி பழுதுபார்க்கும் பணி பாதியில் நின்றதால் குழந்தைகள் அவதி
அங்கன்வாடி பழுதுபார்க்கும் பணி பாதியில் நின்றதால் குழந்தைகள் அவதி
UPDATED : செப் 01, 2014 12:00 AM
ADDED : செப் 01, 2014 01:02 PM
அன்னுார்: கரியாக்கவுண்டனுார் அங்கன்வாடி மைய கட்டடம் பழுது பார்க்கும் பணி, பாதியில் நின்றதால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
வடக்கலுார் ஊராட்சியை சேர்ந்த கரியாக்கவுண்டனுாரில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இம்மையத்தில் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான, 15 குழந்தைகள் படிக்கின்றனர். கட்டடம் மோசமான நிலையில் உள்ளதால் பராமரிப்பு செய்ய நிதி ஒதுக்கப்பட்டு, பணி துவக்கப்பட்டது.
ஆனால், பல மாதங்களாகியும், பணி முடிக்கப்படாமல் பாதியில் நின்று போனது. அங்கன்வாடி குழந்தைகள் படிக்க இடமில்லாமல், நடுநிலைப் பள்ளி மாணவர்களின் வகுப்பறையின் ஓரத்தில் படிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்களுக்கும் கற்றலில் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பழுது பார்க்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
