தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞர்களின் திறமையை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் வெங்கய்யா நாயுடு

இளைஞர்களின் திறமையை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் வெங்கய்யா நாயுடு

இளைஞர்களின் திறமையை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் வெங்கய்யா நாயுடு


UPDATED : செப் 01, 2014 12:00 AM

ADDED : செப் 01, 2014 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2014 12:00 AM ADDED : செப் 01, 2014 02:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: நம் நாட்டு இளைஞர்களின் திறமையை மேம்படுத்த வேண்டும், என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசினார்.

கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுடன், தொழில் முனைவோர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், பி.எஸ்.ஜி., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசுகையில், "கோவை, திருப்பூர் மக்களின் கடின உழைப்பு சர்வதேச நாடுகளுக்கு முன் உதாரணமாக உள்ளது. இங்குள்ளவர்களின் திறமையான வெளிப்பாடு ஆச்சர்யமூட்டுகிறது. இதேபோல், நம் நாட்டிலுள்ள இளைஞர்கள் திறமையை மேம்படுத்த வேண்டும்.

திறமை, திட்டம், வேகம் ஆகிய மூன்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரங்கள். ஆயுத உற்பத்தி, தேசத்தின் கட்டமைப்பு, வேலைவாய்ப்பு அதிகரித்தல் ஆகியன மத்திய அரசின் நோக்கமாக உள்ளது" என்றார். இதைதொடர்ந்து, தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடினார். கொடிசியா தலைவர் பொன்னுசாமி உள்ளிட்ட பல்வேறு தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us