தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மாணவிகள் முறையீடு

நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மாணவிகள் முறையீடு

நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மாணவிகள் முறையீடு


UPDATED : செப் 02, 2014 12:00 AM

ADDED : செப் 02, 2014 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2014 12:00 AM ADDED : செப் 02, 2014 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: அரசு விடுதியில் பள்ளி மாணவிகள் தங்கி படிக்க அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டர் ஹரிஹரனிடம் மாணவிகள் முறையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் காக்குடியைச் சேர்ந்தவர் உதயசூரியன். சுற்று கிராம 10ம்வகுப்பு மாணவிகளுடன், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வந்த அவர், கலெக்டர் ஹரிஹரனிடம் அளித்த மனுவில், "எங்கள் கிராம மாணவிகள் 2012 முதல் 2013 வரை விருதுநகர்மாவட்டம் ரெட்டியபட்டி அரசு இலவச பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம்வகுப்பு, 11ம் வகுப்பு, 7ம்வகுப்பு படித்தனர்.

ஆனால் இந்த கல்வியாண்டில், அந்த விடுதியில் இடமில்லை எனக்கூறி வருகிறார்கள். இலவச பஸ் பாஸ் இல்லாததால், மாணவிகள் தினமும் 60 ரூபாய் செலவழித்து பள்ளிக்கு சென்றுவர வேண்டியது உள்ளது. மாணவிகள் விடுதியில் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us