கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பள்ளியில் இலக்கிய போட்டி
கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பள்ளியில் இலக்கிய போட்டி
UPDATED : செப் 02, 2014 12:00 AM
ADDED : செப் 02, 2014 11:08 AM
சிவகங்கை: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், பாரதி விழாவையொட்டி, வரும் 13ம் தேதி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கே.ஆர். பள்ளியில் இலக்கிய போட்டி நடக்கிறது.
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஒப்புவித்தல் போட்டி, 6 முதல் பிளஸ் 2, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டி, பொது மக்களுக்கு பாட்டுப் போட்டி நடக்கிறது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அவர்கள் நிறுவனத்தின் அனுமதி கடிதம் வாங்கி வர வேண்டும்.
ஒப்புவித்தல் போட்டிக்கு ஒரு பள்ளிக்கு 5 மாணவர்கள் மட்டும் அனுமதி. பேச்சு போட்டிக்கு ஒரு நிறுவனத்திற்கு இருவர் அனுமதி. வெற்றி பெற்றவர்களுக்கு 20ம் தேதி நடக்கும் பாரதி விழாவில் பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 98424 09522 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
