சத்துணவு மையங்களில் காஸ் மூலம் சமையல் செய்ய பெற்றோர் கோரிக்கை
சத்துணவு மையங்களில் காஸ் மூலம் சமையல் செய்ய பெற்றோர் கோரிக்கை
UPDATED : செப் 02, 2014 12:00 AM
ADDED : செப் 02, 2014 11:11 AM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றிய, பள்ளி சத்துணவு மையங்களில் விறகு அடுப்பை மாற்றி காஸ் மூலம் சமையல் செய்ய வேண்டுமென பெற்றோர் கோரியுள்ளனர்.
எஸ்.கோயில்பட்டி, மருதிப்பட்டி, எஸ்.செவல்பட்டி நடுநிலைப் பள்ளிகள், முறையூர் துவக்கப்பள்ளி சத்துணவு மையங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இங்கு விறகு அடுப்பில் சமையல் செய்வதால், புகை மாசு ஏற்பட்டு, மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பள்ளிக்களுக்கு காஸ் அடுப்பு வழங்க வேண்டுமென இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
