இந்திய மாணவர்கள் பாதி பேருக்கு போதுமான தகுதியில்லை: சர்வே
இந்திய மாணவர்கள் பாதி பேருக்கு போதுமான தகுதியில்லை: சர்வே
UPDATED : செப் 04, 2014 12:00 AM
ADDED : செப் 04, 2014 05:43 PM
புதுடில்லி: இந்திய மாணவர்களில் பாதிபேர், தாங்கள் என்ன படிக்கிறார்களோ, அந்த நிலையைவிட குறைவான அறிவு மற்றும் தகுதியையேப் பெற்றுள்ளார்கள் என்று ஒரு சர்வே தெரிவிக்கிறது.
அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளதாவது, பெரும்பான்மையான ஆசிரியர்கள், இந்தியாவின் மாணவர் மதிப்பீட்டு அமைப்பு, தேர்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டுள்ளது என்று நம்புகிறார்கள்.
மேலும், பெற்றோர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கும் ஆதரவின் மூலம் அவர்கள் ஓரளவு திருப்திபட்டுக் கொள்கிறார்கள்.
உண்மையில், திறன் மற்றும் ஆளுமை மேம்பாடு ஆகியவை, மாணவர்களின் முன்னேற்றத்தை அளவிடுவதில் முக்கியமான அம்சங்கள் என்று ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். இதற்கடுத்து, உயர்கல்விக்கு தயாராதல் மற்றும் பணி மற்றும் தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆசிரியர்களில் 79% பேர், கடந்த 10 ஆண்டுகளில் கற்றல் சூழல் மேம்பட்டுள்ளது என்று கருதுகிறார்கள். கற்றலின் வெற்றியை தீர்மானிப்பதில், நிஜ வாழ்க்கை மற்றும் நடைமுறை தயாராதல்கள் முக்கியமாவை என்றும் ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு பல விஷயங்கள் அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
