sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பளுதுாக்குதல் போட்டியில் சரஸ்வதி தியாகராஜா கலை, அறிவியல் கல்லுாரி சாம்பியன்

பளுதுாக்குதல் போட்டியில் சரஸ்வதி தியாகராஜா கலை, அறிவியல் கல்லுாரி சாம்பியன்

பளுதுாக்குதல் போட்டியில் சரஸ்வதி தியாகராஜா கலை, அறிவியல் கல்லுாரி சாம்பியன்


UPDATED : செப் 05, 2014 12:00 AM

ADDED : செப் 05, 2014 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2014 12:00 AM ADDED : செப் 05, 2014 11:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை: பாரதியார் பல்கலை அனைத்துக் கல்லுாரி மாணவர்களுக்கான பளுதுாக்குதல் போட்டியில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கலை அறிவியல் கல்லுாரி, சாம்பியன் பட்டம் வென்றது.

பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கான பளு - வலு துாக்குதல் போட்டி, ஈச்சனாரி ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில், 4 நாட்களாக நடந்து வருகிறது. பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி 196 புள்ளிகள்; கோவை சி.எம்.எஸ்., கல்லுாரி 182 புள்ளிகள்; ஈரோடு கலை கல்லுாரி 156 புள்ளிகள்; என்.ஜி.பி.,கல்லுாரி 154 புள்ளிகள் பெற்று முறையே முதல் நான்கு இடங்களை பெற்றன.

மாணவர்களுக்கான பளுதுாக்குதல் போட்டியில், முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள்: 56 கிலோ உடல் எடை- என்.ஜி.பி., கல்லுாரி பாஸ்கர், ஆர்.எம்.வி., கல்லுாரி சக்தி, ஈரோடு கலை கல்லுாரி கார்த்தி; 62 கிலோ-ஆர்.ஏ.என்.எம்., கல்லுாரி சுரேஷ், ஈரோடு கல்லுாரி கார்த்திக், சி.எம்.எஸ்., கல்லுாரி ஆண்ட்ரின்; 69 கிலோ- ஈரோடு கலை கல்லுாரி தியாகராஜ், சி.எம்.எஸ்., கல்லுாரி அருண், ஆர்.ஏ.என்.எம்., கல்லுாரி சவுந்தரம்; 77 கிலோ-சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி தவசீலன், ஆர்.ஏ.என்.எம்., கல்லுாரி பாபு, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி ராக்கிமுத்து; 85 கிலோ- சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி பிரவீன்குமார், என்.ஜி.பி.,கல்லுாரி பிரசாந்த், ரத்தினம் கல்லுாரி சரத்குமார்; 94 கிலோ- சி.எம்.எஸ்., கல்லுாரி சுனேஷ்பாபு, ஆர்ஏஎன்எம்.,கல்லுாரி விக்னேஷ்வரன், சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி பிரபாகரன்; 105 கிலோ-சி.எம்.எஸ்.,கல்லுாரி பிரவீன்குமார், பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை நிஷாந்த், கொங்கு கல்லுாரி கார்த்திகேயன்; 105+கிலோ-சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி லோகநாதன், பூபாலன், சி.எம்.எஸ்.,கல்லுாரி விக்னேஷ்வரன் ஆகியோர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us