கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவு
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவு
UPDATED : செப் 05, 2014 12:00 AM
ADDED : செப் 05, 2014 11:21 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இப்பதவிக்கு, தகுதியான 3 பேர் பட்டியலை, பல்கலைக்கழக வேந்தருக்கு பரிந்துரைப்பதற்காக 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், முன்னாள் துணைவேந்தர் பலராமன், டாக்டர் சண்முகம், சென்னை கால்நடை கல்லூரி முன்னாள் முதல்வர் நடராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் பலராமன், பல்கலைக்கழக வேந்தராலும், டாக்டர் சண்முகம் அரசாலும், டாக்டர் நடராஜன், பல்கலைக்கழக கல்விக் குழுவாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
