வரும் 11ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
வரும் 11ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
UPDATED : செப் 05, 2014 12:00 AM
ADDED : செப் 05, 2014 11:27 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி, அம்மாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், வரும் 11ம் தேதி நடக்கிறது.
* கை, கால் ஊனமுற்றோர் (ஆண், பெண்) இறகுப்பந்து (ஒற்றையர், இரட்டையர்) மற்றும் மேஜைப்பந்து போட்டிகள். அணிக்கு தலா ஐந்து பேர் (இடம் - சிட்டி கிளப், அம்மாபாளையம்). இடம் - ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, அம்மாபாளையம்.
* பார்வையற்றோர் (ஆண், பெண்)கையுந்து பந்து. அணிக்கு தலா ஏழு பேர்.
* மனவளர்ச்சி குன்றியோர் (ஆண், பெண்). எறிபந்து போட்டி, அணிக்கு தலா ஏழு பேர்.
* காது கேளாதோர் (ஆண், பெண்). கபடி போட்டி (அணிக்கு தலா ஏழு பேர்). போட்டியில் பங்கேற்க விரும்புவோர், திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை அணுகலாம்.
